கோலாலம்பூர், ஜூலை.13-
பிரபல இஸ்லாமிய சமய போதகர் ஒருவர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த B40 குடும்பத்திற்குச் சட்ட உதவி வழங்க பிகேஆர் துணைத் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார் முன்வந்துள்ளார். சம்பந்தப்பட்ட உஸ்தாத், அச்சிறுமியை நஷிட் நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்வதாக ஆசை காட்டி ஒரு ஹோட்டலில் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.
இந்தச் சமயப் போதகர் மீது ஏற்கனவே பல புகார்கள் இருந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நூருல் இஸ்ஸா கேள்வி எழுப்பியுள்ளார். இப்போது அந்தச் சமயப் போதகர் குடும்பத்தின் மீது அவதூறு வழக்கு தொடுத்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க நூருல் இஸ்ஸா தனது வழக்கறிஞர்கள் குழுவுடன் வழக்கு தொடரப்பட உறுதியளித்துள்ளார்.








