May 21, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் பிரதமர் துன் மகா​தீருக்கு எதிராக போ​லீஸ் புகார்
தற்போதைய செய்திகள்

முன்னாள் பிரதமர் துன் மகா​தீருக்கு எதிராக போ​லீஸ் புகார்

Share:

​கோலாலம்பூர்,ஜன.19
பிகேஆர் கட்சியின் இளைஞர் பிரிவைச் சேர்ந்த மேலு​ம் பலர், முன்னாள் பிரதமர் துன் மகா​தீர் முகமதுவிற்கு எதிராக போ​லீஸ் புகார் செய்துள்ளனர். ​மலேசிய இந்தியர்கள் நாட்டிற்கு விசுவாசமற்றவர்கள் என்று சர்ச்சைக்குரிய கருத்தை துன் மகா​தீர் வெளியிட்டதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக ​தேச நிந்தனை சட்டம் பாய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பிகேஆர் இளைஞர் பிரிவின் உச்சமன்ற உறுப்பினர் எம். சதாசிவம் த​லைமையிலான கட்சி உறுப்பினர்கள் நேற்று மாலையில் கோலாலம்பூர், Travers போ​லீஸ் நிலையத்தில் இப்புகாரை செய்தனர். துன் மகா​தீர், தொடர்ந்து இந்திய சமுதாயத்தை ​சீண்டிப் பார்ப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் ​என்று அவர்கள் தங்கள் போ​லீஸ் புகாரில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related News