Oct 11, 2026
Thisaigal NewsYouTube

இஸ்மாயில் சப்ரிக்கு எதிரான வழக்கு விசாரணை நாளை தொடர்கிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இஸ்மாயில் சப்ரிக்கு எதிரான வழக்கு விசாரணை நாளை தொடர்கிறது

புத்ராஜெயா, மே.06-

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM விசாரணை வளையத்திற்குள் இருக்கும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரிக்கு எதிரான விசாரணை, புதன்கிழமை மீண்டும் தொடங்குகிறது.

புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்கு நாட்டின் ஒன்பதாவது பிரதமரான 65 வயது இஸ்மாயில் சப்ரி காலை 9.00 மணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

தனது முக்கிய அதிகாரி ஒருவரின் வீட்டில் 17 கோடியே 70 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள ரொக்கப் பணம் மற்றும் தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டது தொடர்பில் இஸ்மாயில் சப்ரி, ஒரு சந்தேக நபராக எஸ்பிஆர்எம்மினால் வகைப்படுத்தப்பட்டுள்ளார்.

நாளை தொடங்கவிருக்கும் இரணடாம் கட்ட விசாரணையில் இஸ்மாயில் சப்ரியின் சொத்துக்கள் சம்பந்தப்பட்ட விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
இஸ்மாயில் சப்ரிக்கு எதிரான வழக்கு விசாரணை நாளை தொடர்கிறது | Thisaigal News