Sep 22, 2026
Thisaigal NewsYouTube
இறப்பு வீட்டில் சூதாட்டம், 13 இந்தியர்கள் கைது
தற்போதைய செய்திகள்

இறப்பு வீட்டில் சூதாட்டம், 13 இந்தியர்கள் கைது

Share:

சுங்கை பட்டாணியில் இறப்பு வீட்டின் முன்புறம், சூதாட்டத்தில் ஈடுப்பட்டதாக நம்பப்படும் 13 இந்திய ஆடவர்கள் கைது செய்ய்யப்பட்டுள்ளனர் என்று கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ வான் ஹஸ்சான் வான் ஹமாட் தெரிவித்தார்.

சுங்கை பட்டாணி, தாமான் கெலாடியில் சூதாட்டம் நடைபெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், மாநிலத்தின் டி7 போலீஸ் படையினர் நடத்திய திடீர் சோதனை நடவடிக்கையில் அந்த 13 இந்திய ஆடவர்களும் கைது செய்யப்பட்டதாக வான் ஹஸ்சான் குறிப்பிட்டார்.

தவிர, சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட சூதாட்ட கார்டுகள், நாற்காலிகள், மேசைகள் மற்றும் 5 ஆயிரத்து 209 வெள்ளி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக வான் ஹஸ்சான் கூறினார்.

Related News