Oct 10, 2026
Thisaigal NewsYouTube

மலாய்க்கார இளையோர்களின் செயல் அச்சத்தை ஏற்படுத்துகிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாய்க்கார இளையோர்களின் செயல் அச்சத்தை ஏற்படுத்துகிறது

புத்ராஜெயா, ஜூன்.18-

மலாய்க்கார இளையோர்கள் மத்தியில் போதைப்பொருள் பழக்கம் மற்றும் மின் சிகரெட்டான வேப் பயன்பாடு அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கவலை தெரிவித்தார்.

இது இளையோர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் இதில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கூட இந்த விவகாரம் குறித்து தாம் பேசியதாக அவர் தெரிவித்தார்.

இதர இனத்தவர்களுக்கும் இத்தகைய பழக்கம் உண்டு என்ற போதிலும் மலாய்க்கார இளையோர்களின் நிலை பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று பிரதமர் கவலை தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →