Sep 10, 2026
Thisaigal NewsYouTube
நிபோங் திபால் கழிவுநீர் தொட்டியில் ஆண் சடலம்: 5 மியன்மார் நாட்டவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

நிபோங் திபால் கழிவுநீர் தொட்டியில் ஆண் சடலம்: 5 மியன்மார் நாட்டவர்கள் கைது

Share:

பினாங்கு மாநிலம் நிபோங் திபால் பகுதியில் கழிவுநீர் தொட்டியில் ஆடவர் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 மியான்மர் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டு, 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

30 வயதுகளில் உள்ள அவர்கள் நெகிரி செம்பிலான், லெங்கெங் பகுதியில் கைது செய்யப்பட்டு புக்கிட் மெர்தாஜாம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கடத்தல் தொடர்பான குற்றவியல் சட்டத்தின் 365-ஆவது பிரிவின் கீழ் விசாரணை நடைபெற்று வருகின்றது.

தாமான் ஶ்ரீ பிஸ்தாரி பகுதியில் உள்ள வீட்டின் கழிவுநீர் தொட்டியில், 50 வயதுகளில் உள்ள அந்த நபரின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டது. குறைந்தது இரண்டு நாட்களாக அச்சடலம் தொட்டிக்குள் இருந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, உயிரிழந்தவரின் வங்கிக் கணக்கில் சந்தேகத்திற்கிடமான பணப் பரிமாற்றங்கள் நடைபெற்றதாக அவரது மருமகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை மட்டும் சுமார் 30 ஆயிரம் ரிங்கிட் பணம் சுங்கை பாக்காபில் உள்ள மளிகைக் கடையின் கணக்குக்கு மாற்றப்பட்டதாகவும், அந்தப் பணத்தை மியன்மாரில் உள்ள வங்கிக்கு மாற்றுமாறு கடை உரிமையாளருக்கு உத்தரவிடப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related News

87.6% தொழிலாளர்கள் லிண்டுங் 24 மணி நேர திட்டத்தில் தொடர முடிவு: சொக்சோ அறிவிப்பு

87.6% தொழிலாளர்கள் லிண்டுங் 24 மணி நேர திட்டத்தில் தொடர முடிவு: சொக்சோ அறிவிப்பு

இந்தியா–மலேசியா வர்த்தக உறவு வலுப் பெறுகிறது: பிரிக்ஸ் (BRICS) மூலம் வர்த்தகம், முதலீட்டில் புதிய வாய்ப்புகள் உருவாக்கம்

இந்தியா–மலேசியா வர்த்தக உறவு வலுப் பெறுகிறது: பிரிக்ஸ் (BRICS) மூலம் வர்த்தகம், முதலீட்டில் புதிய வாய்ப்புகள் உருவாக்கம்

‘ஓப் ஃபெல்லா’ விசாரணை விரிவடைகிறது: முன்னாள் ஃபெல்டா தலைவரை சிறையில் விசாரிக்க எஸ்பிஆர்எம் முடிவு

‘ஓப் ஃபெல்லா’ விசாரணை விரிவடைகிறது: முன்னாள் ஃபெல்டா தலைவரை சிறையில் விசாரிக்க எஸ்பிஆர்எம் முடிவு

மார்ச்சில் மலேசியாவை வாட்டி எடுக்கப் போகும் சூப்பர் எல் நினோ - மெட்மலேசியா எச்சரிக்கை

மார்ச்சில் மலேசியாவை வாட்டி எடுக்கப் போகும் சூப்பர் எல் நினோ - மெட்மலேசியா எச்சரிக்கை

இந்திய சமூக மேம்பாட்டுக்காக 59.76 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் 7 புதிய திட்டங்களை அறிவித்தார் அமைச்சர் ரமணன்

இந்திய சமூக மேம்பாட்டுக்காக 59.76 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் 7 புதிய திட்டங்களை அறிவித்தார் அமைச்சர் ரமணன்

பந்திங்கில் விவசாயி சுட்டுக் கொலை: 20 வயது இளைஞர் கைது

பந்திங்கில் விவசாயி சுட்டுக் கொலை: 20 வயது இளைஞர் கைது