Sep 10, 2026
Thisaigal NewsYouTube
பந்திங்கில் விவசாயி சுட்டுக் கொலை: 20 வயது இளைஞர் கைது
தற்போதைய செய்திகள்

பந்திங்கில் விவசாயி சுட்டுக் கொலை: 20 வயது இளைஞர் கைது

Share:

சிலாங்கூர் மாநிலம் பந்திங் அருகே தெலுக் புனுட் பகுதியில் வீட்டின் வெளியே 52 வயது விவசாயி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணி முதல் 11 மணிக்குள், அந்த நபர் பலமுறை துப்பாக்கியால் சுடப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

முதற்கட்ட விசாரணையில், அவர் தனது மகன் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டை பார்வையிடுவதற்காக அங்கு சென்றிருந்தது தெரிய வந்துள்ளது.

கொலைக்கான காரணமோ, சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளோ அல்லது கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதமோ இதுவரை கைப்பற்றப்படவில்லை.

எனினும், சந்தேகிக்கப்படும் சில நபர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

இது தொடர்பாக பந்திங் பகுதியில் நேற்று இரவு, 20 வயதுகளில் உள்ள உள்ளூர் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

87.6% தொழிலாளர்கள் லிண்டுங் 24 மணி நேர திட்டத்தில் தொடர முடிவு: சொக்சோ அறிவிப்பு

87.6% தொழிலாளர்கள் லிண்டுங் 24 மணி நேர திட்டத்தில் தொடர முடிவு: சொக்சோ அறிவிப்பு

இந்தியா–மலேசியா வர்த்தக உறவு வலுப் பெறுகிறது: பிரிக்ஸ் (BRICS) மூலம் வர்த்தகம், முதலீட்டில் புதிய வாய்ப்புகள் உருவாக்கம்

இந்தியா–மலேசியா வர்த்தக உறவு வலுப் பெறுகிறது: பிரிக்ஸ் (BRICS) மூலம் வர்த்தகம், முதலீட்டில் புதிய வாய்ப்புகள் உருவாக்கம்

‘ஓப் ஃபெல்லா’ விசாரணை விரிவடைகிறது: முன்னாள் ஃபெல்டா தலைவரை சிறையில் விசாரிக்க எஸ்பிஆர்எம் முடிவு

‘ஓப் ஃபெல்லா’ விசாரணை விரிவடைகிறது: முன்னாள் ஃபெல்டா தலைவரை சிறையில் விசாரிக்க எஸ்பிஆர்எம் முடிவு

மார்ச்சில் மலேசியாவை வாட்டி எடுக்கப் போகும் சூப்பர் எல் நினோ - மெட்மலேசியா எச்சரிக்கை

மார்ச்சில் மலேசியாவை வாட்டி எடுக்கப் போகும் சூப்பர் எல் நினோ - மெட்மலேசியா எச்சரிக்கை

இந்திய சமூக மேம்பாட்டுக்காக 59.76 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் 7 புதிய திட்டங்களை அறிவித்தார் அமைச்சர் ரமணன்

இந்திய சமூக மேம்பாட்டுக்காக 59.76 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் 7 புதிய திட்டங்களை அறிவித்தார் அமைச்சர் ரமணன்

நிபோங் திபால் கழிவுநீர் தொட்டியில் ஆண் சடலம்: 5 மியன்மார் நாட்டவர்கள் கைது

நிபோங் திபால் கழிவுநீர் தொட்டியில் ஆண் சடலம்: 5 மியன்மார் நாட்டவர்கள் கைது