Sep 10, 2026
Thisaigal NewsYouTube
‘ஓப் ஃபெல்லா’ விசாரணை விரிவடைகிறது: முன்னாள் ஃபெல்டா தலைவரை சிறையில் விசாரிக்க எஸ்பிஆர்எம் முடிவு
தற்போதைய செய்திகள்

‘ஓப் ஃபெல்லா’ விசாரணை விரிவடைகிறது: முன்னாள் ஃபெல்டா தலைவரை சிறையில் விசாரிக்க எஸ்பிஆர்எம் முடிவு

Share:

ஃபெல்டா முதலீட்டுக் கழகத்தின் சொத்துகள் மற்றும் முதலீடுகள் தொடர்பாக நடைபெறும் விசாரணைக்கு உதவும் வகையில், தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் ஃபெல்டா தலைவரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

இது குறித்து எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டத்தோ ஶ்ரீ அப்துல் ஹாலிம் அமான் கூறுகையில், விசாரணையில் உள்ள சில சொத்துகளின் கொள்முதல் மற்றும் ஃஎப்ஐசியின் முதலீடுகளுக்கு இடையே தொடர்பு இருப்பதால், முன்னாள் ஃபெல்டா தலைவரிடம் வாக்குமூலம் பெறுவது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்காக மலேசிய சிறைத் துறையின் ஒத்துழைப்பையும் எஸ்பிஆர்எம் நாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘ஓப் ஃபெல்லா’ எனப்படும் இந்த விசாரணையில் இதுவரை 7 விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளன.

முன்னாள் ஃபெல்டா மற்றும் எஃப்ஐசி இயக்குநர்கள், குழு உறுப்பினர்கள், நிர்வாக அதிகாரிகள், அரசு நிறுவனங்கள், நில அதிகாரிகள், சுயாதீன மதிப்பீட்டாளர்கள், சட்ட நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை பிரதிநிதிகள் உள்ளிட்ட 29 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விசாரணையுடன் தொடர்புடைய இரண்டு முன்னாள் உயர் அதிகாரிகள், கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி எஸ்பிஆர்எம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் முன்னாள் ஃபெல்டா தலைமை இயக்குநரும், முன்னாள் எஃப்ஐசி தலைமைச் செயல் அதிகாரியும் அடங்குவர். இருவரும் தற்போது விசாரணைக்கு உதவும் வகையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related News

87.6% தொழிலாளர்கள் லிண்டுங் 24 மணி நேர திட்டத்தில் தொடர முடிவு: சொக்சோ அறிவிப்பு

87.6% தொழிலாளர்கள் லிண்டுங் 24 மணி நேர திட்டத்தில் தொடர முடிவு: சொக்சோ அறிவிப்பு

இந்தியா–மலேசியா வர்த்தக உறவு வலுப் பெறுகிறது: பிரிக்ஸ் (BRICS) மூலம் வர்த்தகம், முதலீட்டில் புதிய வாய்ப்புகள் உருவாக்கம்

இந்தியா–மலேசியா வர்த்தக உறவு வலுப் பெறுகிறது: பிரிக்ஸ் (BRICS) மூலம் வர்த்தகம், முதலீட்டில் புதிய வாய்ப்புகள் உருவாக்கம்

மார்ச்சில் மலேசியாவை வாட்டி எடுக்கப் போகும் சூப்பர் எல் நினோ - மெட்மலேசியா எச்சரிக்கை

மார்ச்சில் மலேசியாவை வாட்டி எடுக்கப் போகும் சூப்பர் எல் நினோ - மெட்மலேசியா எச்சரிக்கை

இந்திய சமூக மேம்பாட்டுக்காக 59.76 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் 7 புதிய திட்டங்களை அறிவித்தார் அமைச்சர் ரமணன்

இந்திய சமூக மேம்பாட்டுக்காக 59.76 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் 7 புதிய திட்டங்களை அறிவித்தார் அமைச்சர் ரமணன்

பந்திங்கில் விவசாயி சுட்டுக் கொலை: 20 வயது இளைஞர் கைது

பந்திங்கில் விவசாயி சுட்டுக் கொலை: 20 வயது இளைஞர் கைது

நிபோங் திபால் கழிவுநீர் தொட்டியில் ஆண் சடலம்: 5 மியன்மார் நாட்டவர்கள் கைது

நிபோங் திபால் கழிவுநீர் தொட்டியில் ஆண் சடலம்: 5 மியன்மார் நாட்டவர்கள் கைது