Sep 27, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூரில் பயங்கர தீ விபத்து: 2 தரை வீடுகள், 3 கார்கள், மோட்டார் சைக்கிள் எரிந்து நாசம்
தற்போதைய செய்திகள்

சிலாங்கூரில் பயங்கர தீ விபத்து: 2 தரை வீடுகள், 3 கார்கள், மோட்டார் சைக்கிள் எரிந்து நாசம்

Share:

சிலாங்கூர் ஜாலான் SS 5D/6 பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு தரை வீடுகள், மூன்று கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் முழுமையாக சேதமடைந்தன.

இச்சம்பவம் குறித்து மாலை 7.40 மணியளவில் அவசர அழைப்பு பெறப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் உதவி நடவடிக்கை இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, பெட்டாலிங் ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் மற்றும் டாமன்சாரா நிலையத்தின் உதவியுடன் 16 அதிகாரிகள் மற்றும் வீரர்கள் தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் கிட்டத்தட்ட 40 விழுக்காடு எரிந்த நிலையில் தரை வீடுகளையும், முற்றிலும் எரிந்த நிலையில் மூன்று கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர்.

இத்தீவிபத்திற்கான காரணம் குறித்து தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Related News