Jul 31, 2026
Thisaigal NewsYouTube
போலீசாரை பதறவிட்ட ஆடவன் ஒரு மாத கால சிறை
தற்போதைய செய்திகள்

போலீசாரை பதறவிட்ட ஆடவன் ஒரு மாத கால சிறை

Share:

பெட்டாலிங் ஜெயா விலிருந்து சைபர்ஜெயா வரை 28 போலீஸ் கார்கள் பின்தொடர்ந்த போது பரவலான கவனத்தைப் பெற்ற பெஸ்ஸா ரக வாகன ஓட்டுநருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஒரு மாத கால சிறைத்தண்டனையும் 10,000 வெள்ளி அபராதமும் விதித்துள்ளது.

பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய காரணத்திற்காக 27 வயதுடைய பி.அன்பரசன் - னுக்கு ஐந்து ஆண்டுகள் வாகன ஓட்ட தடையும் விதிக்கப்பட்டுள்ளதாக மாஜிஸ்திரேட் ஷஹரில் அனுவார் அஹ்மத் முஸ்தபா தெரிவித்தார்.

அன்பரசனுடன் 21 வயதுடைய அவரின் மனைவி எம்.ரிஷ்லானி- யும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அனுமதியின்றி கூர்மையான ஆயுதம் வைத்திருந்ததற்காகவும் குற்றச்சாட்டப்பட்டனர்.

Related News