Aug 2, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை சாலாக் தமிழ்ப்பள்ளிக்கு ஜாலூர் கெமிலாங் புக் ஒப் ரெக்கார்ட்ஸ் அங்கீகாரம்
தற்போதைய செய்திகள்

சுங்கை சாலாக் தமிழ்ப்பள்ளிக்கு ஜாலூர் கெமிலாங் புக் ஒப் ரெக்கார்ட்ஸ் அங்கீகாரம்

Share:

சுங்கை சாலாக் தமிழ்ப்பள்ளிக்கு சில்கவர்மென் மலேசியா பெர்ஹாட் நிறுவத்தினர் ‘ஜாலூர் கெமிலாங் புக் ஒப் ரெக்கார்ட்ஸ்’ எனும் விருதை வழங்கி சிறப்பித்தது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சிக்கு ஜாலூர் கெமிலாங் புக் ஒப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தினர், போர்ட்டிக்சன் மாவட்டக் கல்வி இலாகாவும் தலைவர் ஹஜி கமானிசாம் பின் ஹஜி திண்டேக், ஆகியோர் கலந்து கொண்டனர்.

100 மீட்டர் பதாகையில் மலேசிய நாட்டின் வரலாறு, பிரதமர்கள், நாட்டின் பண்பாடு சார்ந்த சின்னங்கள், புகழ்பெற்ற அடையாளங்கள், போன்றவற்றை மலேசியா மடானி எனும் சொற்றொடரைக் கொண்டு வரைந்து சாதனை படைத்துள்ளனர்.

குறிப்பாக ஓர் இடத்தில் கூட நேர் கோடுகளோ அல்லது வளைக் கோடுகளோ பயன்படுத்தப்படவில்லை என்பது சிறப்பு அம்சமாகும்..

இப்பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள், மற்ற ஊழியர்கள் ஆகிய 217 பேரின் கைவண்ணத்தில் இந்தப் பதாகை உருவானது என அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவக்குமார் வெள்ளைசாமி குறிப்பிட்டார்.

மலேசியா மடாணி எனும் சொற்றொடரை தமிழ், சீனம், மலாய் ஆகிய மொழிகளில் 19,763 முறை பயன்படுத்தப்பட்டது

ஒவ்வாறான பதாகை நாட்டில் இதற்கு முன் உருவாக்கப்பட்டதில்லை என்பதே இந்த சிறப்பு அங்கிகாரம் வழங்கப்பட காரணம் என்று ஜாலூர் கெமிலாங் புக் ஒப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் தோற்றுநட் எல்வின் லாய் தமதுரையில் குறிப்பிட்டார்.

Related News

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

ஜார்ஜ் டவுனில் பரபரப்பு: பழுது பார்க்கும் பணியின் போது கட்டடக் கூரை இடிந்து விழுந்து விபத்து

ஜார்ஜ் டவுனில் பரபரப்பு: பழுது பார்க்கும் பணியின் போது கட்டடக் கூரை இடிந்து விழுந்து விபத்து

சுங்கை பூலோ அருகே பயங்கரம்: கன்டெய்னர் லாரி விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஓட்டுநர் மீட்பு

சுங்கை பூலோ அருகே பயங்கரம்: கன்டெய்னர் லாரி விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஓட்டுநர் மீட்பு

அரசு நிலங்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும்: பகாங் சுல்தான் அதிரடி உத்தரவு

அரசு நிலங்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும்: பகாங் சுல்தான் அதிரடி உத்தரவு