கெடா மாநிலத்திற்கு அதிகமான சுற்றுப் பயணிகள் வர வேண்டும் என்றால் அம்மாநில முதல்வர் சனுசி நோர் தமது சொற்கலில் கவனம் தேவை என எச்சரித்துள்ளார் சுற்றுலா, கலை பண்பாட்டு அமைச்சர் தியோங் கிங் சிங்.
கடந்த வாரம் கெடா மாநில சட்டமன்றக் கூட்டத்தில், சனுசி தியோங்கை "மொட்டைத் தலை. பானை வயிறு கொண்ட கோயில்" என்று மரியாதை இல்லாமல் பேசியதாகக் கூறப்பட்டது.
கடந்த மாதம் தாய்லாந்தின் சடாவோவில் அந்நாட்டுப் பிரதமர் ச்ரெத்தா தவிசின் உடனான சந்திப்பில் பிரதமர் அன்வார் இப்ராஹிமுடன் சென்றபோது, கெடாவின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு தியோங் போதுமான அளவு முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என்று சனுசி குற்றம் சாட்டினார்.
தமது நா காக்கப்பட வில்லை என்றால் நடப்புச் சூழலைக் காட்டிலும் மிக மோசமான பின் விளைவுகளை அம்மாநிலச் சுற்றுலாத் துறை சந்திக்க நேரிடுவதோடு யாருக்கும் பயனில்லாத நிலை ஏற்படும் என தியொங் எச்சரித்துள்ளார்.
சனுசி வெளியிட்ட மரியாதை அற்றக் கூற்றை மீட்டும் கொண்டு தியோங்கிடம் மன்னிப்பு கேட்க வேன்டும் என சரவாக் மாநில சுற்றுலாத் துறை, புத்தாக்கத் தொழில்துறை, கலைத்துறை அமைச்சர் அப்துல் கரிம் ரஹ்மான் ஹம்ஸா வலியுறுத்தினார்.
இருப்பினும், தியோங் சனுசியின் கேலியை நிராகரித்தார், ஏனெனில் தியோங்கைப் பொறுத்தவரை இது சனுசியின் அரசியலில் ஒரு பகுதியாகும் என தியோங் கூறினார்.








