May 22, 2026
Thisaigal NewsYouTube
MH370 விமானம் தேடும் பணி மீண்டும் தொடங்கப்பட வேண்டும். போக்குவரத்து அமைச்சர் கருத்து.
தற்போதைய செய்திகள்

MH370 விமானம் தேடும் பணி மீண்டும் தொடங்கப்பட வேண்டும். போக்குவரத்து அமைச்சர் கருத்து.

Share:

கோலாலம்பூர், மார்ச் 3 -

10 ஆண்டுகளுக்கு முன் மர்மமான நிலையில் காணாமல் போன எம் எச் 370 விமானத்தை மீண்டும் தேடும் பணிக்கான புதிய முயற்சி தொடங்கப்பட வேண்டும் என மலேசிய போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்துள்ளார்.

இந்த தேடுதல் பணி திட்டம் தொடர்பாக , அமைச்சரவைவில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் கிடைத்தப்பின் அரசாங்கம் அமெரிக்காவில் அமைந்துள்ள ரோபொத்திக் மாரின் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதற்கான திட்டத்தில் கையெழுத்திடும் என லோக் மேலும் கூறினார்.

இந்த ஆலோசனைக் குறித்து மேலும் விவாதித்து முடிவெடுப்பதற்காக போக்குவரத்து அமைச்சு ஓசியன் இன்பினித்தி நிறுவனத்தின் சேவையும் அவர்களின் ஆலோசனைகளையும் கருத்தில் கொள்ளும் என்பதால் அவர்களை மலேசியாவிற்கு வரவழைக்க தாம் போக்குவரத்து அமைச்சிடம் கூறிவுள்ளதாக அந்தோனி லோக் மேலும் கூறினார்

Related News