ரவூப், ஜூலை.27-
ரஹ்மா மடானி விற்பனைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 300 மில்லியன் ரிங்கிட்டில் இருந்து 600 மில்லியன் ரிங்கிட்டாக இரட்டிப்பாகியுள்ளது. இந்த அதிரடி அறிவிப்பை பிரதமர் அன்வார் இப்ராஹிம் வெளியிட்ட நிலையில், துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி, இந்தத் திட்டம் புறநகர்ப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
வாழ்க்கைச் செலவு சுமையால் தவிக்கும் மக்களுக்குக் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை இது உறுதிச் செய்யும் என்றார். 100 ரிங்கிட் எஸ்டிஆர் உதவி குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த ஸாஹிட், இந்த உதவியை மட்டம் தட்டுபவர்கள் தங்கள் தொகையை வழிபாட்டுத் தலங்களுக்கு நன்கொடையாக அளிக்கலாம் எனப் பதிலடி கொடுத்தார்.








