Sep 25, 2026
Thisaigal NewsYouTube
லஹாட் டத்துவில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் கூட்டுப் பாலியல் வல்லுறவு - 4 பேர் கைது
தற்போதைய செய்திகள்

லஹாட் டத்துவில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் கூட்டுப் பாலியல் வல்லுறவு - 4 பேர் கைது

Share:

சபா மாநிலம், லகாட் டத்து பகுதியில், பதின்ம வயதுப் பெண் ஒருவரை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், வெளிநாட்டவர் ஒருவர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் அனைவரும் 20 வயதுகளில் உள்ளவர்கள் என்றும், கடந்த மே 9-ஆம் தேதி அதிகாலை சுமார் 2 மணியளவில் பாதிக்கப்பட்ட பெண் தனது அறையில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த போது, அவர்கள் இக்குற்றத்தை புரிந்துள்ளதாகவும் மாவட்ட போலீஸ் தலைவர் சுல்பஹாரின் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர்கள் அறைக்குள் நுழைந்து, பாதிக்கப்பட்ட பெண்ணை அடுத்தடுத்து பாலியல் உறவு கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியதாகவும் நம்பப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினர் அறிந்த பின்னரே, பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளதாக நேற்று இரவு வெளியிடப்பட்ட அறிக்கையில் சுல்பஹாரின் தெரிவித்துள்ளார்.

Related News