Jun 17, 2026
Thisaigal NewsYouTube
பாஸ் கட்சியை எதிர்த்து அனைத்து முனைகளிலும் போட்டியிடத் தயாராகிறது பெர்சாத்து
தற்போதைய செய்திகள்

பாஸ் கட்சியை எதிர்த்து அனைத்து முனைகளிலும் போட்டியிடத் தயாராகிறது பெர்சாத்து

Share:

பெர்சாத்து கட்சியுடனான அரசியல் உறவை பாஸ் கட்சி முறித்துக் கொண்டதையடுத்து, அதற்கு எதிராக அனைத்து முனைகளிலும் முழு வலிமையுடன் களமிறங்கத் தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முகிதீன் யாசின் தெரிவித்துள்ளார்.

ஒரே கூட்டணியில் இருக்கும் பாஸ் மற்றும் பெர்சாத்து கட்சிகள் இனி வெவ்வேறு பாதையில் பயணிப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், அவர்கள் அவ்வாறு முடிவெடுத்துவிட்ட நிலையில், இனி தாங்களும் அதன்படியே பயணிக்கவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இரவு பெர்சாத்து தலைமையகத்தில் நடைபெற்ற உச்ச மன்றக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முகைதீன், இனி அனைத்து முனைகளில் முழு மூச்சாகக் களமிறங்குவோம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், பெர்சாத்து கட்சியானது, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியிலேயே தொடரும் என்பதையும் முகைதீன் உறுதிப்படுத்தியுள்ளார்.

பெர்சாத்து கட்சியானது அதிகார வேட்கை கொண்டது என்றும், மலாய்க்காரர்களின் ஒற்றுமைக்கு முன்னுரிமை அளிக்கவில்லை என்றும் கடந்த வாரம் குற்றம் சாட்டிய பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், அக்கட்சியுடனான உறவை முறித்துக்கொள்வதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News