Sep 25, 2026
Thisaigal NewsYouTube
2.5 மில்லியன் ரிங்கிட் ஊழல்: அரசாங்க ஊழியர்கள் உட்பட 13 பேர் கைது
தற்போதைய செய்திகள்

2.5 மில்லியன் ரிங்கிட் ஊழல்: அரசாங்க ஊழியர்கள் உட்பட 13 பேர் கைது

Share:

சுமார் 2.5 மில்லியன் ரிங்கிட் லஞ்ச ஊழல் வழக்கில் தீபகற்ப மலேசியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஓர் அரசாங்க நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் முன்னாள் இயக்குநர் உட்பட 13 பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.

இது குறித்து எஸ்பிஆர்எம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கைது செய்யப்பட்டவர்களில் 30 முதல் 60 வயதிற்குட்பட்ட 10 ஆண்களும், 3 பெண்களும் அடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், கைது செய்யப்பட்டவர்களில் எட்டு பேர் அரசு ஊழியர்கள் என்றும், மற்ற ஐந்து பேர் நிறுவனங்களை நடத்தி வரும் பொதுமக்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க அமைப்பின் ஒப்பந்தங்களை சில முகவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த நிறுவனக் குழு ஏகபோகமாக பெறுவதற்கு அனுமதிப்பதற்காக இந்த லஞ்சத் தொகை வழங்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை எஸ்பிஆர்எம் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.

Related News