Sep 25, 2026
Thisaigal NewsYouTube
சிகாம்புட்டில் 1.7 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

சிகாம்புட்டில் 1.7 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் ஆடவர் கைது

Share:

கோலாலம்பூரின் செகாம்புட் பகுதியில் உள்ள வீடு ஒன்றில், கடந்த ஜூன் 11-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 1.7 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்ததோடு, ஆடவர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

இச்சோதனை நடவடிக்கையானது செந்தூல் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சோதனையின் போது, 1,167.4 கிராம் எடையுள்ள எம்.டி.எம்.ஏ தூள், 69.2 கிராம் எடையுள்ள எரிமின்-5 மாத்திரைகள், 186.63 கிராம் எடையுள்ள ecstasy மாத்திரைகள், 1,158.9 கிராம் ketamine மற்றும் 7.27 கிராம் யபா மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் பஸ்ரீ சகோனி தெரிவித்துள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட இந்தப் போதைப்பொருட்களானது ஒரே நேரத்தில் 3 லட்சத்து 49 ஆயிரத்து 872 பேருக்கு விநியோகிக்கப்படும் அளவில் இருந்ததாகவும் பஸ்ரீ சகோனி குறிப்பிட்டுள்ளார்.

இவ்வழக்கு தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Related News