Apr 13, 2026
Thisaigal NewsYouTube
12 ஆயிரம் ரிங்கிட் லஞ்ச ஊழல் வழக்கு: நான்கு போலீஸ்காரர்கள் பிணையில் விடுவிப்பு
தற்போதைய செய்திகள்

12 ஆயிரம் ரிங்கிட் லஞ்ச ஊழல் வழக்கு: நான்கு போலீஸ்காரர்கள் பிணையில் விடுவிப்பு

Share:

கோத்தா பாருவில் சுமார் 12,000 ரிங்கிட் வரையில் லஞ்சம் கேட்டதும் பெற்றதுமான குற்றச்சாட்டில், கடந்த ஏப்ரல் 7 -ஆம் தேதி முதல் ஐந்து நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நான்கு போலீஸ் அதிகாரிகள், நேற்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM-ஆல் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் கிளந்தான் மாநிலத்தில் உள்ள மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் பணியாற்றி வந்தவர்கள் எனத் தகவல்கள் கூறுகின்றன.

ரிமாண்ட் காலம் முடிவடைந்து அவர்கள் நான்கு பேரும் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக நடவடிக்கைக்காக துணை அரசாங்க வழக்கறிஞரிடம் விசாரணை ஆவணங்களை SPRM சமர்ப்பிக்கவுள்ளது.

நபர் ஒருவர் தனது வாகனத்தில் கெத்தும் இலைகளை கொண்டு சென்றது சோதனையில் கண்டறியப்பட்ட போது, அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக, லஞ்சம் கேட்டதாக சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள நால்வரும், மாதந்தோறும் கிளந்தான் SPRM அலுவலகத்தில் நேரில் சென்று கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Related News