May 24, 2026
Thisaigal NewsYouTube
30 கோடி வெள்ளி கோரப்படும், பிரபாகரன் தகவல்
தற்போதைய செய்திகள்

30 கோடி வெள்ளி கோரப்படும், பிரபாகரன் தகவல்

Share:

புத்ராஜெயா,ஆகஸ்ட் 24-

இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்காக வரும் 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 30 கோடி வெள்ளியை ஒதுக்கிடு செய்யுமாறு மலேசிய இந்தியர்களின் சமூகவியல், பொருளாதார உருமாற்றுப்பிரிவான மித்ரா, அரசாங்கத்திடம் கோரியிருப்பதாக அதன் சிறப்புப்பணிக்குழுத் தலைவர் P. பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

மித்ராவிற்கு இந்த ஆண்டு, 10 கோடி வெள்ளியை அரசாங்கம் ஒதக்கிய போதிலும் இந்திய சமுதாயத்தில் மிகவும் பின்தங்கியுள்ள B40 பிரிவைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் பேருக்கு உதவ வேண்டுமானால் மேலும் 5 கோடி வெள்ளி தேவைப்படுவதாக பிரபாகரன் குறிப்பிட்டார்.

தற்போது மித்ராவிற்கு வழங்கப்பட்டு வரும் பத்து கோடி வெள்ளி போதுமானதாக இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

கிட்டத்தட்ட 30 கோடி வெள்ளியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்தால் மட்டுமே உதவித் தேவைப்படக்கூடிய இந்திய சமூகத்திற்கு மேலும் சேவைகளை விரிவுப்படுத்த இயலும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News