பட்டர்வொர்த், தாமான் பந்தாய் பெர்சியில் அமைந்துள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தினால் இரண்டு வயது சிறுவன் உயிரிழந்தான். இன்று காலையில் ஏற்பட்ட அந்தத் தீ விபத்து சம்பவத்தில் அந்த இரண்டு வயது சிறுவன் தீயில் கருகிய நிலையில் அந்த அறையில் இருந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயலாக்க பிரிவின் அதிகாரி முகமட் நசீர் இத்ரிஸ் தகவல் தெரிவித்தார்.
அந்த இரண்டு வயது குழந்தை அறையில் தனியாக உறங்கிக் கொண்டிருந்ததாகவும், அந்த வீட்டில் வசித்து வந்த அக்குழந்தையின் அம்மா, பாட்டி மற்றும் அண்ணுக்கு, அந்த அறையில் தீ ஏற்பட்டிருப்பது அறியாத நிலையில் அவர்கள் இருந்துள்ளார்கள் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பிரேத பரிசோதனைக்காக அச்சிறுவனின் உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக தீயணைப்பு அதிகாரி தெரிவித்தார்.








