Jul 6, 2026
Thisaigal NewsYouTube
பாதசாரிக்கு மரணம் விளைவித்ததாக வங்காளதேச ஆடவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பாதசாரிக்கு மரணம் விளைவித்ததாக வங்காளதேச ஆடவர் மீது குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூர், ஜூன்.16-

வாகனத்தை அபாயகரமாகச் செலுத்தி, பாதசாரி ஒருவரை மோதி, மரணம் விளைவித்ததாக வங்காளதேச ஆடவர் ஒருவர் கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

39 வயது அதிக் ஸாமான் என்ற அந்த வங்காளதேச ஆடவர், கடந்த ஜுன் 13 ஆம் தேதி காலை 11.49 மணியளவில் கோலாலம்பூர் ஜின்ஜாங்கிலிருந்து ஜாலான் ஈப்போவை நோக்கி நிசான் Sylphy ரக காரில் வேகமாக வந்து கொண்டிருந்த போது ஒரு பாதசாரியான 46 வயது முகமட் ரெட்ஸுவான் ஜமால் என்பரை மோதித் தள்ளி மரணம் விளைவித்ததாக குற்றஞ்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 10 ஆண்டு சிறை மற்றும் 50 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவில் சட்டத்தின் கீழ் அந்த வங்காளதேச ஆடவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News