சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் தலைமையிலான மூடா கட்சியை ஓர் உறுப்புக்கட்சியாக ஏற்றுக்கொள்ளப்படுமானால் அது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்குக் கூடுதல் மதிப்பைக் கொண்டு வந்து விடாது என்று கூறப்பட்டாலும் அந்தக் கூட்டணிக்கு விசுவாசமான ஓர் அரசியல் சகாவாக மூடா தொடர்ந்து இருக்கும் என்று அக்கட்சியின் சிலாங்கூர் மாநில தகவல் பிரிவின் துணைத் தலைவரான எர்னஸ்த் தான் யோங் கூறியுள்ளார்.
மூடா கட்சிக்கு எதிராக கூறப்படும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த எர்னஸ்த் தான் யோங் , மூடா கட்சிக்கு எந்தப் பதவியும் வழங்கப்படாவிட்டாலும் ஒற்றுமை அரசாங்கத்திற்கு மூடா தனது பிளவுப்படாத ஆதரவை வழங்கி வரும் என்று பி.கே.ஆர். கட்சியின் சிலாங்கூர் மாநில தகவல் பிரிவு துணைத் தலைவர் ஃபௌஸி ஃபட்ஸீலுக்கு நினைவூட்டினார்.
மூடா கட்சி, கூடுதல் மதிப்பைக் கொண்டு வராது அல்லது பக்காத்தான் ஹராப்பான் செல்வாக்கில் நாங்கள் சவாரி செய்கிறோம் என்று யாராவது கூறினால் அது உண்மையிலேயே ஏமாற்றம் அளிக்கிறது. மூடாவைப் பொறுத்தவரையில் மலேசியாவில் நமது அரசியல் சேவை, அரசியல் மதிப்பு மற்றும் அரசியல் கொள்கைகள் ஆகியவற்றில் எங்களின் பேராட்டாங்களும், முன்னெடுப்புகளும் தொடரும் என்று எர்னஸ்த் தான் யோங் தெரிவித்தார்.
குறிப்பாக, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர்பான பிரச்னைகளுக்குக் குரல் எழுப்புவதிலும் அதற்கு தீர்வு காண்பதிலும் மூடா தலைவர்கள் உறுதி பூண்டு இருப்பதை எர்னஸ்த் தான் யோங் சுட்டிக்காட்டினார்.

Related News

25-வது மாடியிலிருந்து விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

ருக்குன் நெகாராவைக் கேலி செய்ததாக நாடகக் கலைஞர்கள் மீது விசாரணை

நாடு முழுவதும் பெர்கேசோ அதிரடி சோதனை – 159 இடங்களில் சோதனை; 14 நோட்டீஸ்கள்

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு


