Aug 19, 2026
Thisaigal NewsYouTube
ரோன் 97, ரோன் 95, டீசல் விலை அதிரடி உயர்வு!
தற்போதைய செய்திகள்

ரோன் 97, ரோன் 95, டீசல் விலை அதிரடி உயர்வு!

Share:

நாளை முதல் ரோன் 97 பெட்ரோல், மானியமற்ற ரோன் 95 மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

ரோன் 97 விலை லிட்டருக்கு 10 சென் உயர்ந்து 4 ரிங்கிட் 25 சென் ஆகும். மானியமற்ற ரோன் 95 விலை 15 சென் உயர்ந்து 3 ரிங்கிட் 77 சென் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மானியமற்ற டீசல் விலை 20 சென் அதிகரித்து லிட்டருக்கு 4 ரிங்கிட் 67 சென் ஆகும்.

எனினும், புதி 95 திட்டத்தின் கீழ் ரோன் 95 விலை 1 ரிங்கிட் 99 சென்னாகவே தொடரும். புதி டீசல் திட்டத்தின் கீழ் டீசல் விலையும் லிட்டருக்கு 2 ரிங்கிட் 10 சென்னாக மாற்றமின்றி நீடிக்கும்.

Related News