Sep 26, 2026
Thisaigal NewsYouTube
ஈப்போவில் மூன்று தெருநாய்கள் இறந்து கிடப்பு
தற்போதைய செய்திகள்

ஈப்போவில் மூன்று தெருநாய்கள் இறந்து கிடப்பு

Share:

ஈப்போ, டேசா ரிஷா இண்டா பகுதியில் மூன்று தெருநாய்கள் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவற்றில் ஒரு நாய் கர்ப்பமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக தெருநாய்களுக்கு உணவளித்து வரும் 57 வயது குடும்பத் தலைவி ஜி. மகேஸ்வரி, நேற்று காலை நாய்களுக்கு உணவளிக்கச் சென்றபோது மூன்று நாய்கள் இறந்து கிடந்ததைக் கண்டதாகக் கூறினார்.

நாய்களின் வாயைச் சுற்றிலும் நுரை காணப்பட்டதால், அவை விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

எனினும், இது குறித்து போலீசாருக்கு எந்தப் புகாரும் தகவலும் கிடைக்கவில்லை என்றும், அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்றபோது அத்தகைய சம்பவம் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் முஹம்மது நஜிப் ஹம்சா தெரிவித்துள்ளார்.

Related News