பல ஆண்டு காலமாக நீடித்து ரும் பாலஸ்தீனம் - இஸ்ரேல் நெருக்கடிக்கு தீர்வு காண உலக நாடுகள் தவறிவிட்டதாக அமானா கட்சியின் அனைத்துலவ விவகாரங்களுக்கான பொறுப்பாளர் டத்தோ ராஜா கமாருல் பாஹ்ரின் ஷா அமாட் தெரிவித்துள்ளார்.
இதுநாள் வரையில் வெளி உதவிகள் எதுவுமின்றி சுயமாக போராடி வந்த பாலஸ்தீன மக்கள் வேறு வழியின்றி பதிலடி தாக்குதலை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர் என்று ராஜா கமருல் குறிப்பிட்டார்.
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் உள்ளிட்ட பல பயங்கரவாத குழுக்கள் இஸ்ரேலின் பல பகுதிகளில் நேற்று காலையில் வான் , தரை மற்றும் கடல் வழியாக ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தியிருப்பது தொடர்பில் கருத்துரைக்கையில் ராஜா கமருல் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எதிர்பாராத நிலையில் நடைபெற்ற இந்த தாக்குதலால் இஸ்ரேலில் 300 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள வேளையில் 1,500 க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர்.








