Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பாயான் பாரு வெள்ளக்காடாக மாறியது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாயான் பாரு வெள்ளக்காடாக மாறியது

பாயான் பாரு, டிச.14-


நேற்று வெள்ளிக்கிழமை மாலையில் பெய்த கனத்த மழையில் பினாங்கில் பயான் பாருவில் பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு, பாதசாரிகளையும், வாகனமோட்டிகளையும் பெரும் சிரமத்தில் ஆழ்த்தியது.

இந்த அடை மழையில் ஜாலான் மசூரி, ஜாலான் மாயாங் பாசீர் மற்றும் சன்ஷின் ஸ்குவர் பேரங்காடி அருகில் உள்ள பகுதிகள் உட்பட பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக மாறின.

5 மணிக்குத் தொடங்கிய இந்த அடை மழை, ஸ்பைஸ் அரேனாSpice Arena மாநாட்டு மையத்திற்கு முன்புறம் உள்ள பிரதான சாலைகளில் நீர் கரைபுரண்டோடும் அளவிற்கு முழுங்கால் வரையில் வெள்ளத்தின் மட்டம் உயர்ந்து காணப்பட்டது.

அண்மைய காலமாக பாயான் லெப்பாஸ் பகுதியில் ஒரு மணி நேரம் பெய்யக்கூடிய மழையில்கூட பல பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு நிலைமையை மோசமாக்கி விடுவதாக வாகனமோட்டிகள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →