நவ. 7-
நாட்டின் முன்னணி வர்த்தக குழுமமான BERJAYA, BERJAYA TVET College எனும் TVET தொழில்திறன் பயிற்சி கல்லூரியை நிறுவி, தற்போது வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.
பள்ளிப்படிப்பை முடித்த 18 வயது இளையோர்கள், தங்களின் எதிர்காலத்திற்கான வெற்றிக்களத்தை அமைத்துக்கொள்வதற்கும், செழிப்பான வாழ்க்கையை நோக்கி அவர்களை அழைத்துச்செல்வதற்கான தூண்டுதலை வழங்குவதற்கும் BERJAYA TVET College வழிகாட்டி வருகிறது.

வணிகக் குழுமம் மற்றும் தொழில்முனைவோர் என்ற வகையில் BERJAYA- வின் வளமான பாரம்பரியத்தின் காரணமாக அடிப்படை கல்வியை முடித்த இளையோர்களை TWET கல்வி வாய்ப்பின் வாயிலாக சமையற்கலை மற்றும் ஹோட்டல் துறை பயிற்சிகளில் பங்கேற்பதற்கு அழைக்கிறது.
ஹோட்டல் துறை சார்ந்த சமையற்காலையான Food Preparation & Culinary Arts, Food & Beverage உட்பட மூன்று துறைகளில் 12 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 15 மாத காலப் பயிற்சிக்கு மாணவர்கள் செலுத்த வேண்டிய கட்டணம் வெறும் 2 ஆயிரம் வெள்ளி மட்டுமே.

ஒரு மாத கால அடிப்படைப் பயிற்சிக்குப் பின்னர் தொழில் ரீதியாக 15 மாத காலப்பயிற்சிக்கு மாணவர்கள் உட்படுத்தப்படும் போது அவர்கள் பயிற்சிப்பெறுகின்ற ஹோட்டல் துறையே அவர்களுக்கான 80 விழுக்காட்டு பயிற்சி கட்டணத்தை ஏற்றுக்கொள்கிறது.
தவிர, மாதம் தோறும் அவர்களுக்கு 700 ரிங்கிட் அவலன்ஸ் தொகை வழங்கப்படுகிறது. மேலும் தங்கும் வசதி, உணவு, பயிற்சிக்கான யுனைடெட் கிங்டமினால் அங்கீகரிக்கப்பட்ட டிப்ளோமா சான்றிதழ் அவர்களின் வேலை வாய்ப்புக்கான உத்தரவாதத்தை வழங்குகிறது.
ஹோட்டல் துறைகளில் மலேசியா மட்டுமின்றி உலகளாவிலான வேலை வாய்ப்பை வழங்கும் அளவிற்கு 15 மாத பயிற்சியை முடித்துக்கொண்ட மாணவர்களுக்கு உலக சந்தையில் வேலை வாய்ப்பைத் தர வல்ல UK டிப்ளோமா சான்றிதழ், அவர்களைப் வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்வது திண்ணம் என்கிறார் BERJAYA TVET கல்லூரியின் தலைவரான டாக்டர் R. சிவபிரகாஷ்.

BERJAYA TVET கல்லூரியில் சேர்வதன் மூலம் மாணவர்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.
மாணவர்கள் இளம் தொழில் வல்லுநர்களாக சிறந்து விளங்குவதற்கு என்ன தேவை என்பதை BERJAYA TVET கல்லூரி தெளிவாகப் புரிந்து வைத்துள்ளது. சுருங்கச்சொன்னால் BERJAYA TVET கல்லூரியின் பயிற்சி, உலக சந்தையில் மாணவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கின்றன. பயிற்சியாளர்கள் பட்டம் பெறுவதற்கு முன்பே வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக கூறுகிறார் டாக்டர் சிவபிரகாஷ்.








