கோல திரங்கானு, நவம்பர்.04-
எண்ணெய் துரப்பண மேடையில் அத்துமீறி நுழைந்த நான்கு இந்தோனேசிய ஆடவர்களைக் கடல்சார் போலீசார் கைது செய்துள்ளனர்.
திரெங்கானு, கெமாமானிலிருந்து வட கிழக்காக 139 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பகுதியில் வீற்றிருக்கும் ஆள் இல்லாத எண்ணெய் துரப்பண மேடையில் நான்கு இந்தோனேசியர்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் ஒன்றிடமிருந்து கிடைக்கப் பெற்ற புகாரின் அடிப்படையில் நால்வரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அந்த துரப்பண மேடையில் கேபள் கம்பிகளைத் திருட வந்தவர்கள் என்று நம்பப்படுவதாக கெமாமான் கடல் சார் ஏஜென்சியின் இயக்குநர் அப்துல் ஹாலிம் ஹம்ஸா தெரிவித்தார்.








