Oct 2, 2026
Thisaigal NewsYouTube

ஆயர் ஈத்தாமில் பயங்கரத் தீ விபத்து: 3 மாதக் கர்ப்பிணிப் பெண் உயிர் தப்பினார்!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆயர் ஈத்தாமில் பயங்கரத் தீ விபத்து: 3 மாதக் கர்ப்பிணிப் பெண் உயிர் தப்பினார்!

ஜார்ஜ்டவுன், டிசம்பர்.07-

பினாங்கு, ஆயர் ஈத்தாம், ஜாலான் அங்சானாவில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், 3 மாதக் கர்ப்பிணியானப் பெண் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பினார். நேற்று இரவு 9.18 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன், பாயா தெருபோங் தீயணைப்பு - மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்றதாக பினாங்கு மாநில தீயண்ணைப்பு – மீட்புப் படை செயலாக்கப் பிரிவின் உதவி இயக்குநர் ஜோன் சகூன் பிரான்சிஸ் தெரிவித்தார்.

தீ முழுமையாகப் பரவும் முன்பே, 30 வயதான அந்தப் பெண், தானே பாதுகாப்பாக வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இந்தப் பெண் காயமின்றி உயிர் தப்பினாலும், அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட, மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →