கோத்தா கினபாலு, செப்டம்பர்.09-
மாணவி ஸாரா கைரினா மகாதீரின் உடலில் அவர் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதற்கான எந்த ஒரு காயத்தையும் தான் காணவில்லை என அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவ அதிகாரி கொரோனர் நீதிமன்றத்தில் இன்று சாட்சியமளித்துள்ளார்.
கடந்த ஜூலை 16-ம் தேதி குயின் எலிஸபெத் மருத்துவமனைக்கு அவர் கொண்ட வரப்பட்ட போது, அவருக்கு சிகிச்சையளித்த முதல் மருத்துவ அதிகாரியான டாக்டர் ஜென்னிஃபர் வூ அளித்துள்ள சாட்சியில், ஸாரா உடலில் சுயமாக ஏற்படுத்திக் கொண்ட காயங்கள் எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், தலையின் பின்புறத்தில் வீக்கம் மற்றும் இரத்தப்போக்கு, இடது கணுக்காலில் திறந்த எலும்பு முறிவு மற்றும் வலது கணுக்காலில் மூடிய எலும்பு முறிவு உள்ளிட்ட குறிப்பிடத்தக்க காயங்கள் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








