டிச.5-
ஓர் அரச நகராக வகைப்படுத்தப்பட்டுள்ள கிள்ளான் மாநர் மன்றத்தின் தூய்மை நிலை குறித்து மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா தமது கவலையையும், ஏமாற்றத்தையும் இன்று வெளிப்படுத்தியுள்ளார்.
கிள்ளான் மாநகரின் வரலாற்று மதிப்பு மற்றும் அதன் துரித வளர்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவை பெருமைப்படத்தக்க வகையில் இருந்த போதிலும் பெரும்பாலான பகுதிகள் மிகவும் அசுத்தமாக உள்ளன. கிள்ளான் ஆற்றிலும் குப்பைக்கூளங்கள் நிரம்பி, மாசுப்பாட்டை ஏற்படுத்தி வருவதாக தமது கவலையை சுல்தான் வெளிப்படுத்தினார்.
இன்று கிள்ளானில் சீன முஸ்லிம்களின் Masjid Jamek பள்ளிவாசலை அதிகாரப்பூர்வமாக திறந்துவைத்து உரையாற்றுகையில் சுல்தான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.








