Oct 3, 2026
Thisaigal NewsYouTube

இளைஞர்களுக்கான சிறப்பு நிதி: 2027 பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்- அன்வார் கோடி காட்டினார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இளைஞர்களுக்கான சிறப்பு நிதி: 2027 பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்- அன்வார் கோடி காட்டினார்

2027ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இளைஞர்களுக்காக சிறப்பு நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்படலாம் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோடி காட்டியுள்ளார்.

கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் இன்று நடைபெற்ற 2026 ஆம் ஆண்டு இளையோர் பொருளாதார பயிலரங்கை தொடக்கி வைத்து உரையாற்றிய அன்வார், கல்விச் செலவுகள் மற்றும் குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் தேவைகள் குறித்து இளைஞர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார்.

“சில பல்கலைக்கழக மாணவர்கள் படிக்க விரும்புகிறோம், ஆனால் பசியுடன் இருக்கிறோம் என்கின்றனர். இது குறித்து கவனம் செலுத்தப்படும். பட்ஜெட் தாக்கல் செய்யும்போது அறிவிப்பேன்,” என்றார்.

வசதியில்லாத மாணவர்கள் கல்விக்காகக் கடன் வாங்கும் நிலை ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அன்வார் தெரிவித்தார்.

2027ஆம் ஆண்டு பட்ஜெட் அக்டோபர் 9ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
டெங்கில் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட 3 மோட்டார் குண்டுகள் வெடிக்கச் செய்து அழிப்பு

டெங்கில் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட 3 மோட்டார் குண்டுகள் வெடிக்கச் செய்து அழிப்பு

மது போதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்: மரத்தான் ஓட்டப்பந்தய வீரர்கள் இருவர் காயம்

மது போதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்: மரத்தான் ஓட்டப்பந்தய வீரர்கள் இருவர் காயம்

நேபாள பேரிடரில் 54 மலேசியர்கள் மாயம்: குடும்பங்களுக்கு நிதிச் சுமையிலிருந்து உடனடி நிவாரணம் தேவை

நேபாள பேரிடரில் 54 மலேசியர்கள் மாயம்: குடும்பங்களுக்கு நிதிச் சுமையிலிருந்து உடனடி நிவாரணம் தேவை

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி மரணம்: குடும்பம் அரசுக்கு எதிராக வழக்கு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி மரணம்: குடும்பம் அரசுக்கு எதிராக வழக்கு

இந்தியர்கள் செயற்கை நுண்ணறிவு துறையில் திறனை வளர்த்துக் கொள்ள தேவையானவறற்றைச் செய்வேன்- இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ

இந்தியர்கள் செயற்கை நுண்ணறிவு துறையில் திறனை வளர்த்துக் கொள்ள தேவையானவறற்றைச் செய்வேன்- இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ

பேராக் மாநில நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் கருத்துகளுக்கு ஆரம்பத்திலேயே நடவடிக்கை

பேராக் மாநில நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் கருத்துகளுக்கு ஆரம்பத்திலேயே நடவடிக்கை