Oct 5, 2026
Thisaigal NewsYouTube

கல்வி, சுகாதாரச் சீர்திருத்தம் மீது கவனம் செலுத்தப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கல்வி, சுகாதாரச் சீர்திருத்தம் மீது கவனம் செலுத்தப்படும்

கோலாலம்பூர், அக்டோபர்.02-

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இம்மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், வீடமைப்பு, கல்வி, சுகாதாரச் சீர்திருத்தம் மீது கவனம் செலுத்துவதாக இருக்கும் என்று இரண்டாவது நிதி அமைச்சர் அமீர் ஹம்சா ஹஸிஸான் தெரிவித்தார்.

பதின்மூன்றாவது மலேசியத் திட்டம் மற்றும் மடானி பொருளாதாரக் கட்டமைப்பு முறை ஆகியவற்றுக்கு இசைவாக 2026 ஆம் ஆண்டு பட்ஜெட் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் வீடமைப்பு, கல்வி, மற்றும் சுகாதாரத்துறைகளை வலுப்படுத்துவதை இந்த நிதி அறிக்கை உறுதிப்படுத்தும் என்று அமீர் ஹம்சா தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →