ஜெலி, டிசம்பர்.18-
இன்று திரெங்கானு, ஜெலி, கம்போங் பத்து மெலிந்தாங்கில் நிகழ்ந்த சாலை விபத்தில் தந்தையும் மகனும் மரணமுற்றனர்.
மதியம் சுமார் 1.50 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. பெரோடுவா அல்ஸா (Perodua Alza) ரகக் காரில் பயணித்த தந்தையும் அவரது மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்ததால் உயிரிழந்ததாகத் தெரிகிறது.
தந்தையும் மகனும் பயணித்த கார் எதிரே வந்த Toyota Lexus ரக காருடன் மோதியது. அந்தக் கார் கரையோர பள்ளத்தில் விழுந்தது. இதில் 39 வயது தந்தையும், 16 வயது மகனும் உயிரிழந்ததாக அடையாளம் கூறப்பட்டது. ஜெலி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 8 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியிருந்த உடல்களை மீட்டனர்.








