May 22, 2026
Thisaigal NewsYouTube
சிறையிலிருந்து நஜிப்பை வெளியேற்றும் அம்னோ-வின் முயற்சிகளால் ஒற்றுமை அரசாங்கத்தின் தோற்றத்திற்கு களங்கம்
தற்போதைய செய்திகள்

சிறையிலிருந்து நஜிப்பை வெளியேற்றும் அம்னோ-வின் முயற்சிகளால் ஒற்றுமை அரசாங்கத்தின் தோற்றத்திற்கு களங்கம்

Share:

பெட்டாலிங் ஜெயா, மே 09-

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கை சிறையிலிருந்து வெளியேற்றுவதற்கு, அம்னோ தொடர்ந்து நெருக்குதலை வழங்கிவருவது, ஒற்றுமை அரசாங்கத்தின் தோற்றத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக, மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் அஸ்மில் தாயேப் கருத்துரைத்துள்ளார்.

அதன் விளைவு, நாட்டின் 16ஆவது பொதுத்தேர்தலில், ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளும், ஒற்றுமை அரசாங்கத்தின் எண்ணம் ஈடேறாமல் போக செய்யும் என்றாரவர்.

கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கி ஊழலுக்கு எதிராக பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி குரல் கொடுத்து வருகின்றது.

இந்நிலையில், ஊழல்கள் காரணமாக சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள நஜிப்பை, சிறையிலிருந்து வெளியேற்றும், அம்னோ-வின் நடவடிக்கைகளால், பக்காத்தான் ஹாராப்பான்-னின் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அதன் காரணமாக, அடுத்த பொதுத்தேர்தலில் அவர்கள், அக்கூட்டணிக்கு வாக்களிக்காமல் போகும் சாத்தியம் உள்ளதாகவும் அஸ்மில் தாயேப் குறிப்பிட்டார்.

Related News