பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்.13-
தலைகீழாகப் பறக்கவிடப்பட்ட தேசியக் கொடி விவகாரத்தில், நாளை பினாங்கு கெப்பாளா பாத்தாஸில் அம்னோ இளைஞர் பிரிவு ஏற்பாடு செய்திருக்கும் பேரணியில் பெர்சத்து இளைஞர் பிரிவும் இணையவிருப்பதாக பெர்சத்துவின் இளைஞர் பிரிவின் தலைவர் ஹில்மான் இட்ஹாம் அறிவித்துள்ளார்.
கட்சி அரசியல் பாராமல், தேசியக் கொடியின் மாண்பைக் காக்க எந்தத் தரப்புடனும் இணையத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ‘இஃது ஓர் அச்சுறுத்தல் செயல்' என இப்பேரணியை விமர்சித்த டிஏபிக்கு அவர் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.








