மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கான பி2 லைசென்ஸின் தரம் "பி" ஆக உயர்த்தப்படுவது குறித்து போக்குவரத்து அமைச்சு ஆராய்வதற்கான பரிந்துரை முன்வைக்கப்படும் என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். இந்த பரிந்துரையை போக்குவரத்து அமைச்சு அங்கீரிக்குமானால் பி2 லைசென்ஸ் வைத்திருக்கும் மோட்டார் சைக்கிளோட்டிகள் "பி" லைசென்ஸை இயல்பாகவே பெற்று விடுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்குடன் தாம் கலந்து ஆலோசிக்கப் போவதாக அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார். பி2 லைசென்ஸ் வைத்திருக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் 250 சி.சி.க்கும் குறைவான வேக சக்தியைக் கொண்ட மோட்டார் சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது.
"பி" லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் 500 சி.சி. வரை வேக சக்தியைக் கொண்ட மோட்டர் சைக்கிள்களை ஓட்டுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளோட்டிகளைப் பொறுத்தவரை இந்த சி.சி. வேறுபாட்டில் பெரும் வித்தியாசம் இல்லை என்று அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


