Sep 26, 2026
Thisaigal NewsYouTube
ஜூன் 1 முதல் ஜீப் மற்றும் பிக்கப் வாகனங்களுக்கும் டீசல் மானியம் விரிவுபடுத்தப்பட்டது
தற்போதைய செய்திகள்

ஜூன் 1 முதல் ஜீப் மற்றும் பிக்கப் வாகனங்களுக்கும் டீசல் மானியம் விரிவுபடுத்தப்பட்டது

Share:

நாடெங்கிலும், தரைவழி சரக்கு போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த ஜீப்புகள் மற்றும் பிக்கப் லாரிகளையும் உள்ளடக்கும் வகையில், டீசல் மானியம் வழங்கும் முறையை மேம்படுத்த அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதன்படி, மானிய டீசல் கட்டுப்பாட்டு அமைப்பான SKDS-இன் கீழ், ஜீப் மற்றும் பிக்கப் வாகனங்களையும் தகுதிப்பட்டியலில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறையானது, வரும் ஜூன் 1 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும் என உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் அர்மிசான் முகமது அலிதெரிவித்துள்ளார்.

மேலும், இந்த முடிவானது, கடந்த மே 20-ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இவ்வகை வாகனங்களுக்கு கேமரன் மலைப் பகுதியில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல், நாடு முழுவதும் தரை வழி சரக்கு போக்குவரத்து துறையில் இயங்கி வரும் ஜீப் அல்லது பிக்கப் வாகனங்களை வைத்திருக்கும் நிறுவனங்கள், SKDS திட்டத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம் என்று அர்மிசான் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Related News