Sep 26, 2026
Thisaigal NewsYouTube
ஓப்ஸ் ஹரி ராயா ஐடில்அதா ட்ரோன் கண்காணிப்பை அதிகரிக்கிறது ஜேபிஜே
தற்போதைய செய்திகள்

ஓப்ஸ் ஹரி ராயா ஐடில்அதா ட்ரோன் கண்காணிப்பை அதிகரிக்கிறது ஜேபிஜே

Share:

ஹரி ராயா ஹஜி பண்டிகையை முன்னிட்டு, நாளை மே 24 முதல் மே 31-ஆம் தேதி வரை, சாலைப் போக்குவரத்து துறையான ஜேபிஜே, ட்ரோன்களின் மூலம் போக்குவரத்தைக் கண்காணிக்கவுள்ளது.

இரட்டை கோட்டை மீறி முந்திச் செல்லுதல் மற்றும் அவசர பாதையை பயன்படுத்துதல் போன்ற போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிய, நெரிசல் மிகுந்த முக்கிய சாலைகளில் ட்ரோன்கள் பயன்படுத்தப்படும் என ஜேபிஜே துணை தலைமை இயக்குநர் ஜஸ்மானி ஷபாவ்வி தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் ஹரி ராயா ஐடில்பித்ரி பண்டிகை காலத்தில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்நிலையில், இம்முறை ஓப்ஸ் ஹரி ராயா ஐடில்அதா பண்டிகை காலம் முழுவதும், அவை பயன்படுத்தப்படும் என்று டெங்கிலில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஜஸ்மானி தெரிவித்துள்ளார்.

Related News