Jun 6, 2026
Thisaigal NewsYouTube
காராக் நெடுஞ்சாலை விபத்து: இறந்த மாணவர்களில் ஒருவர் பிரபல வழக்கறிஞரின் மகன்
தற்போதைய செய்திகள்

காராக் நெடுஞ்சாலை விபத்து: இறந்த மாணவர்களில் ஒருவர் பிரபல வழக்கறிஞரின் மகன்

Share:

காராக் நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை நிகழ்ந்த கார் விபத்தில், மரணமடைந்த 3 மலேசிய அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவருக்கு, அடுத்த ஆண்டு திருமணம் நடைபெறவிருந்ததாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

அட்லி ஹக்கீம் என்ற அந்த 24 வயது மாணவர், அதே காரில் பயணித்து படுகாயமடைந்த 27 வயதான அதிரா நஜ்வா தாஜுல் ஆஷிகின்-ஐ அடுத்த ஆண்டு திருமணம் செய்ய திட்டமிட்டிருந்ததாக அவரது தந்தை வழக்கறிஞர் அக்பர்தீன் அப்துல் காதர் தெரிவித்துள்ளார்.

புகழ்பெற்ற வழக்கறிஞரான அக்பர்தீன் அப்துல் காதர், ரோஸ்மா மான்சோரின் சூரிய மின்சக்தி திட்ட வழக்கில் அவரது சார்பில் ஆஜராகி வருபவர் ஆவார்.

இந்நிலையில், நேற்று ஷா ஆலாம், செக்ஷன் 21-இல் இருக்கும் முஸ்லிம் கல்லறையில் தமது மகனின் இறுதிச் சடங்கிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அக்பர்தீன், நடந்த விபத்து குறித்து தமது மூத்த மகனின் நண்பர்கள் தகவல் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், செலாயாங் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அதிரா தற்போது சுயநினைவிற்குத் திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு