Jun 9, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் மெர்சிங்கில் 9 வயது மாணவரிடம் பாலியல் சீண்டல் - ஆசிரியர் கைது
தற்போதைய செய்திகள்

ஜோகூர் மெர்சிங்கில் 9 வயது மாணவரிடம் பாலியல் சீண்டல் - ஆசிரியர் கைது

Share:

ஜோகூர் மாநிலம், மெர்சிங் பகுதியில், 9 வயது பள்ளி மாணவனை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் வழக்கில், ஆசிரியர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

31 வயதான அந்த நபர் மீது புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று மாலை 5.50 மணியளவில் கைது செய்யப்பட்ட மெர்சிங் மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் ரசாக் அப்துல்லா சானிதெரிவித்துள்ளார்.

மேலும், அவரிடமிருந்து ஒரு கைப்பேசியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் இன்று முதல் ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கானது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017-ன் பிரிவு 14(a) மற்றும் 14(d)-யின் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.

Related News

ஜோகூர் மெர்சிங்கில் 9 வயது மாணவரிடம் பாலியல் சீண்டல் - ஆச... | Thisaigal News