Jun 6, 2026
Thisaigal NewsYouTube
சமூக ஊடகவாசிக்கு எதிரான அவதூறு வழக்கு: ராயருக்கு 1 லட்சம் ரிங்கிட் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
தற்போதைய செய்திகள்

சமூக ஊடகவாசிக்கு எதிரான அவதூறு வழக்கு: ராயருக்கு 1 லட்சம் ரிங்கிட் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

Share:

ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர்க்கு எதிராக, எஸ்.முருகேசன் என்பவர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட வீடியோக்கள் தொடர்பான அவதூறு வழக்கில், ராயருக்கு 1 லட்சம் ரிங்கிட் இழப்பீடு வழங்க முருகேசனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், வாட்ஸ்அப், டிக்டாக் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் வெளியிடப்பட்ட பல வீடியோக்கள் தொடர்பாக முருகேசன் மீது ராயர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

முருகேசன் வெளியிட்ட காணொளிகளில் உள்ள கருத்துகள் பலரது கவனத்தை ஈர்த்ததாகவும்,பல விமர்சனங்களைப் பெற்றதாகவும், இதன் மூலம் தமது நற்பெயரும் நன்மதிப்பும் களங்கப்படுத்தப்பட்டதாகவும் ராயர் குற்றம்சாட்டியிருந்தார்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் நிதியை தான் திருடியதாகவும், மேலும் நிதியைத் திருட அல்லது தவறாக பயன்படுத்த திட்டமிட்டிருந்ததாகவும் பொருள் தரும் வகையில் முருகேசனின் கருத்துக்கள் இருந்ததாக அதன் தலைவர் ஆர்எஸ்என் ராயர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 50 வயதான S முருகேசன், இழப்பீட்டுடன், 4,000 ரிங்கிட் நீதிமன்றச் செலவையும் செலுத்த வேண்டும் என்று ஜார்ஜ் டவுன் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி நோர்சல்ஹா ஹம்சா உத்தரவிட்டுள்ளார்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு