ஷா ஆலாம், ஆகஸ்ட்.24-
டாஷ் எனப்படும் டாமான்சாரா-ஷா ஆலாம் நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்தில் 19 வயது கல்லூரி மாணவர் உயிரிழந்தார். தனது மோட்டார் சைக்கிளைச் செலுத்தும் போது கட்டுப்பாட்டை இழந்து, தடுப்பில் மோதியதில், அந்த மாணவர் 21 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ஷா ஆலாம் காவல் படையின் தலைவர் அஸிஸ்டன் கமிஷனர் முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
நேற்று காலை நிகழ்ந்த இவ்விபத்து, இந்த ஆண்டு டாஷ் நெடுஞ்சாலையில் நடந்த மூன்றாவது துயரமான நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள் காவல் படையை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.








