Oct 18, 2026
Thisaigal NewsYouTube

கபடி விளையாட்டு அழியாமல் காக்கப்பட வேண்டும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கபடி விளையாட்டு அழியாமல் காக்கப்பட வேண்டும்

துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி அறிவுறுத்து .


சுங்கைப்பட்டாணி,அக்டோபர் 06-

மலேசியாவில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கபடி விளையாட்டு ஒரு போதும் அழியாமல் காக்கப்பட வேண்டியது தமிழர்களின் பொறுப்பாகும் என்றார் ஒற்றுமைத்துறை அமைச்சகத்தின் துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி .

இந்நாட்டில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களான கபடி மற்றும் சிலம்பம் சுக்மா போட்டியில் அங்கீகாரம் பெற்றுவது பெருமையாகும் . அதற்காக விளையாட்டுத் துறை அமைச்சகத்திடம் போராட்டம் நடத்திய கபடி மற்றும் சிலம்பம் கழகத்திற்கு நன்றி என்றார் சரஸ்வதி கந்தசாமி.

கபடி விளையாட்டுப் பார்ப்பத்தற்கு ஒருவருகொருவர் பிடித்துக் கொள்வதுப் போல் இருந்தாலும் அதில் பல விதமான நுணுக்கங்கள் இருப்பத்தைக் கவனிக்க வேண்டும் என்றார் . ஒற்றுமைத் துறை அமைச்சகம் மூவின மக்களிடைய ஒற்றுமையை வலுப்படுத்துவத்தற்காகவும் அனைவரின் பாரம்பரியத்தை அறிந்துக் கொள்வத்தற்காகவும் இதுபோன்ற பல போட்டி விளையாட்டுகளில் பார்வையாளர்களாகும் பங்கேற்பாளர்களாகும் கலந்து வருவத்தாக துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி குறிப்பிட்டார்.

எனவே, குழந்தைகளுக்கு கபடி விளையாட்டில் ஆர்வத் தூண்டுவத்தற்கு பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் . கபடி அல்லாமல் நம் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் உலகளாவில் கொடிகட்டிப் பறப்பத்தற்கு தமிழர்களாகிய நாம் போராட வேண்டும் .

இன்று பினாங்கு மாநில இந்தியர் திரைப்படச் சங்கம் ஏற்பாட்டில் டிரீம் ஸ்கை ஹோம் புரோடக்‌ஷன் மற்றும் கெடா மாநில கபடி கழகத்தின் ஆதரவோடு சுங்கைப்பட்டாணி மின் தெர்க் மண்டபத்தில் 2024 ஆம் ஆண்டின் தேசிய அளவில் மாநிலங்களுக்கு இடையிலான கபடி போட்டி சிறப்பாக நடைபெற்றது . இப்போட்டியின் நிறைவு விழா கலந்துக் கொண்ட ஒற்றுமைத் துறை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தேற்கண்டவாறு அவரின் சிறப்புரையில் தெரிவித்தார்.

இதற்குயிடையில் , இந்நிகழ்வின் ஏற்பாட்டுக் குழு தலைவர் விக்னேஸ் பிரபு கூறுகையில் , இந்த கபடி போட்டியில் கெடா , பினாங்கு , நெகிரி செம்பிலான் , மலாக்கா , கூட்டரசு பிரதேசம் , மற்றும் கிளாந்தான் ஆகிய 6 மாநில்களைப் பிரதிநிதித்து 12 குழுக்கள் களமிறங்கியத்தாக அவர் தெரிவித்தார் . இதில் பெண் பிரிவில் கூட்டரசு பிரதேசமும் ஆண் பிரிவில் கெடா மாநிலமும் வெற்றி வாகை சூடினர் .

ஆகவே , கெடா மாநிலத்தில் முதன் முறையாக மூன்று அமைச்சகத்தின் ஆதரவில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டின் கபடி போட்டியில் 200 போட்டியாளர்கள் பங்கெடுத்தனர் . அதுடன் இந்நிகழ்வுக்கு நன்கொடை வழங்கி சிறப்பு வருகையாளராக கலந்துக் கொண்ட சிங்கப்பூர் சின்னையா நாயுடு தம்பத்தியர்களும் இதர பிரமுகர்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்ததாக விக்னேஸ் பிரபு கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →