சிலாங்கூர், கோத்தா கெமுனிங் சட்டமன்ற அலுவலகம் ஏற்பாட்டில் அதன் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் தலைமையில் கோத்தா கெமுனிங் சட்டமன்ற்த தொகுதியில் நோன்புப்பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு நேற்று வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஷா ஆலம், செக்ஷன் 28, திவான் எம்.பி.எஸ்.ஏ கெனாங்கா மண்டபத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கி 11 மணி வரை நடைபெற்ற திறந்த இல்ல உபரிசப்பில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இனம், மதம் பாராமலும், நேரத்தை பொருட்படுத்தாமலும் அனைவரும் ஒன்று திரண்டு, கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியின் ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பை சிறக்க செய்து மக்களிடையே ஒற்றுமைரைய புலன்படுத்துகிறது என்று அதன் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் தெரிவித்தார்.
விலைவாசிகள் உயரும் சாத்தியம் ஏற்பட்டுள்ள வேளையில் அனைத்து மக்களும் எதனையும் திட்டமிட்டு, மிக கவனத்துடன் செயல்படுமாறு பிரகாஷ் சம்புநாதன் அறிவுறுத்தினார்.
கடந்த ஆண்டு புத்ரா ஹயிட்ஸில் ஏற்பட்ட எரிவாயு குழாய் விபத்து காரணமாக இந்த திறந்த இல்ல உபசரிப்பு நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் தலைமையில் இவ்விழா சிறப்பாக நடைபெற்றது என்று கோத்தா கமுனிங் சட்டமன்றத் தொகுதியின் இஸ்லாமிய சமய சிறப்பு அதிகாரி அப்துல் மாலிக் பின் அப்துல் ரசீத் தமது உரையில் தெரிவித்தார்.
விவசாய மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு, ஷா ஆலம் மாநகர் மன்றத் தலைவர் கோத்தா டாமன்சாரா, பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் இதர பிரமுகர்கள் நிகழ்வில் திரளாக கலந்து சிறப்பித்தனர்.













