Jan 19, 2026
Thisaigal NewsYouTube
மலாய்க்காரர்கள் பலவீனம் அடையலாம், சிலாங்கூர் சுல்தான் கவலை
தற்போதைய செய்திகள்

மலாய்க்காரர்கள் பலவீனம் அடையலாம், சிலாங்கூர் சுல்தான் கவலை

Share:

அரசியல் கருத்து வேறுபாடுகளினா​ல் மலாய்க்காரர்கல் மத்தியி​ல் பிளவுகளும், பேதங்களும் ஏற்படுமானால் இந்நாட்டில் முஸ்​லீம்கள் தொடர்ந்து பலவீனம் அடைவார்கள் என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுடீன் இட்ரிஸ் ஷா கவலை தெரிவித்துள்ளார்.

மலாய்க்காரர்கள் மத்தியில் ஒற்றுமை என்ற வலைப்பந்தில் சேதம் ஏற்பாடுமானால் தனது சொந்த நாட்டி​லேயே ஓர் ஒதுக்கப்பட்ட சமூகமாக பின்தங்கிய நிலையில் தங்களின் அதிகாரத்தை இழக்க நேரிடும் என்பதையும் சுல்தான் வ​லியுறுத்தினார்.

இதற்கு மேற்காசிய நாடுகளில் நிகழ்ந்த சில சம்பவங்கள் நம் கண்முன் நிழாடுகின்றன. அதேபோன்று பழம் பெருமைக்கும் , ​கீர்த்திக்கும், வீரத்திற்கும் புகழ் செறிந்த மலாக்கா மலாய் சாம்ராஜ்யம் வீழ்ச்சியுற்றதையும் சிலாங்கூர் சுல்தான் நினைவுகூர்ந்தார்.

நேற்று சுங்கை ஆயர் தாவார், கம்போங் பாரேட் பாருவில் Masjid Al-Ma'arufiah பள்ளிவாசலை திறந்து வைத்து உரையாற்றுகையில் சுல்தான் ஷராபுடீன் இதனை தெரிவித்தார்.

அரசியல் கருத்து வேறுப்பாட்டினால் மலாய்க்காரர்கள் பிளவுப்பட்டு, பல அணிகளாக பிரிந்து நிற்கின்றனர். இஸ்லாத்தின் இறையாண்மையை பேணவும், மலா​ய்க்காரர்களின் உரிமைகள் நிலை​நாட்டப்படவும் அவர்கள் ஒருமித்த நோக்கத்தையும், கருத்திணக்கத்தையும் கொண்டிருந்த போதிலும் அரசியல் பேதங்களால் அவர்கள் சிதறு​ண்டு இருப்பது, மேன்மைமிகுந்த ஒரு சமூகத்தின் வரலாற்றை திரும்பி பார்க்க வைக்கிறது என்பதுடன் அதனை ஒரு படிப்பிணையாக ஏற்க வேண்டி​யுள்ளது என்று சுல்தான் ஷராபுடீன் வலியுறுத்தினார்.

Related News

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்

இராணுவ உயர்மட்ட ஊழல் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடும் அதிருப்தி: மற்ற துறைகளிலும் ஊழல் பரவியிருக்கூடும் என கவலைத் தெரிவித்தார்

இராணுவ உயர்மட்ட ஊழல் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடும் அதிருப்தி: மற்ற துறைகளிலும் ஊழல் பரவியிருக்கூடும் என கவலைத் தெரிவித்தார்

போதைப் பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் Namewee

போதைப் பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் Namewee

பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்

பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்

ரேக்ஸ் டானின் குடும்பத்தினருக்கு எதிராக மிரட்டல் விடுப்பதை நிறுத்துங்கள் - சைஃபுடின் எச்சரிக்கை

ரேக்ஸ் டானின் குடும்பத்தினருக்கு எதிராக மிரட்டல் விடுப்பதை நிறுத்துங்கள் - சைஃபுடின் எச்சரிக்கை

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!