கோலாலம்பூர், ஜூலை.22-
இவ்வாண்டு பிப்ரவரி முதல் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பள விகிதமான 1,700 ரிங்கிட், வரும் ஆகஸ்ட் முதல் தேதி முழுமையாக அமலுக்கு வருவதாக ஸ்டீவன் சிம் தலைமையிலான மனித வள அமைச்சு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதன் பொருள் அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச சம்பளம், 1,700 ரிங்கிட்டாக இருக்க வேண்டும் என்று மனித வள அமைச்சு உறுதிப்படுத்தியது.
கடந்த பிப்ரவரி முதல் தேதி நடைமுறைக்கு வந்த 1,700 ரிங்கிட் குறைந்தபட்ச சம்பள முறையில் சில முதலாளிமார்களுக்கு மனித வள அமைச்சு 6 மாத காலத்திற்கு தளர்வு வழங்கிய போதிலும், இந்த நடப்பு விதிமுறை, ஆகஸ்ட் முதல் தேதி முழுமையாக நடைமுறைக்கு வருகிறது.
இதனை அனைத்து முதலாளிமார்களும் பின்பற்றியாக வேண்டும் என்று மனித வள அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








