Jul 31, 2026
Thisaigal NewsYouTube
ஜெய்ன் ரய்யான் விரும்பி உண்ணும் உணவு ஸ்பெகத்தி, பிஹுன் கோரெங்
தற்போதைய செய்திகள்

ஜெய்ன் ரய்யான் விரும்பி உண்ணும் உணவு ஸ்பெகத்தி, பிஹுன் கோரெங்

Share:

டமான்சார, டாமாய், இடமான் குடியிருப்பில் இருக்கின்ற ஆற்றில் கடந்த புதன்கிழமை ஆவ்ஸ்திக் சிறுவனான ஜெய்ன் ரய்யான் உடல் மீட்கப்பட்டது, கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனும் தகவல் கேள்வியுற்று அச்சிறுவனின் பாதுகாவலர் மிக வருத்தத்துடன் ஜெய்ன் ரய்யான் - னுடன் இருந்த ஒரு வருட கால அனுபவத்தை தெரிவித்தார்.

பிறந்த குழந்தையை போலவே ஜெய்ன் ரய்யான் இருப்பான். மென்மையான தோல், பிடிவாதம் இல்லாத குணம், மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் அவனுடைய வேலைகளை அவனே பார்த்துக் கொள்வான்.

இப்படிப்பட்ட 6 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம், இனி இவ்வுலகில் இல்லை என்பதை உணரும் பொழுது மனதிற்கு கவலையாக இருப்பதாக 28 வயதுடைய அவ்னி அஃபிகாஹ் அபாஸ் கூறினார்.

ஜெய்ன் ரய்யான் மிகவும் விரும்பி உண்ணும் உணவு ஸ்பெகத்தி, பிஹுன் கோரெங் ஆகும். பாதுகாவலராக இருந்தாலும் தன்னை 'உமி' என்றுதான் அழைப்பான் என அவ்னி அஃபிகாஹ் வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

Related News