Jun 6, 2026
Thisaigal NewsYouTube
கர்ப்பிணி மனைவியைத் தாக்கிய வழக்கு: வர்த்தகருக்கு 14 ஆண்டுகள் சிறை
தற்போதைய செய்திகள்

கர்ப்பிணி மனைவியைத் தாக்கிய வழக்கு: வர்த்தகருக்கு 14 ஆண்டுகள் சிறை

Share:

தனது முன்னாள் கர்ப்பிணி மனைவியை கடுமையாக தாக்கி, அவரை ஐந்து ஆண்டுகள் கோமா நிலையில் வைத்த வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட வர்த்தகர் ஒருவருக்கு, புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

அரசு தரப்பின், தண்டனை அதிகரிப்பு கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இந்தத் தீர்ப்பை இன்று வழங்கியது.

நீதிபதி அஸ்மான் அப்துல்லா தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு, 43 வயதான ரோஸ்மைனி அப்துல் ரவூப், ஜாஹிடா நார்டின் குடும்பத்துக்கு 25,000 ரிங்கிட் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

அந்தத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், குற்றவியல் தீர்ப்புக்கு எதிராக ரோஸ்மைனி தாக்கல் செய்த மேல்முறையீடும் நிராகரிக்கப்பட்டது.

இந்த வழக்கு நாட்டில் பெரும் கவனம் பெற்ற குடும்ப வன்முறை சம்பவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு